top of page
Search

சமளங்குளம் பாடசாலைக்கு ரூ.12000 பெறுமதியான பரிசில்களை வழங்கியது யுரேனஸ் இளைஞர் கழகம்..!!

  • Writer: யுரேனஸ் கழகம்
    யுரேனஸ் கழகம்
  • Mar 1, 2017
  • 1 min read

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தால் பரிசில் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிகளுக்கு ரூபாய் 12,000 பெறுமதியான பரிசில்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சமளங்குளம் பாடசாலையில் இடம் பெற்றது.

இதில் யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் பரிசில்களை பாடசாலை அதிபரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இப்பரிசில்களை கொள்வனவு செய்ய நிதி உதவி வழங்கிய எமது இளைஞர் கழக தோழர்களாகிய சதாசிவம் துவாரகன் லோஜன் ஜயந்த ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்


 
 
 

Comments


Follow us

samalankulam youth club - t.n0245680456

  • Twitter Metallic
  • Facebook Metallic
  • YouTube Metallic

Twitter

Facebook

Become a Fan

YouTube

Subscribe

bottom of page