top of page

ABOUT

சமளங்குளம் கிராமம் ஆரம்பத்தில் இருந்தது பற்றி பார்போம் 30 வருட ஆயுதப்போராட்டத்தில் பல ஆயுதக்குழுக்களின் மத்தியில் சிக்கித்தவித்த கிராமங்களே சமளங்குளம் ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்கள்  ஆயுதக்குழுக்கள் மூலமே 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.

 

அப்போது மக்கள் மத்தியில் இருந்த பார்வை இளைஞர் கழக உறுப்பினர் எனப்படுபவர். ஆயிதக்குழுக்களின் உறுப்பினராக கருதப்படுவார்கள். இந்த நிலை காரணாம யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆயிதக்குழுக்கள்  இல்லாமல் போய்விட்டது.

 

இதன் பிறகு இளைஞர் கழகங்கள் உருவாகுவது என்பது கடினமாகவே இருந்தது. ஏனெனின் இளைஞர் கழக கூட்டங்கள் நடாத்தினால் ஆயுதக்குழுக்களின் கூட்டங்கள் நடக்கின்றது. என்ற ஒரு தவறான பார்வை புலனய்வுப்பிரிவினரிடம் காணப்பட்டது.

 

இதனால் தனிப்பட்ட முறையில் பல அச்சுறுத்தல்கள் இளைஞர் கழகங்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு  விடுக்கப்பட்டது., 2007-2013 வரை இளைஞர் கழகங்களின் பதிவு செய்யப்படவில்லை.

 

இப்பிரதேச இளைஞர்கள் திட்டமிட்ட  போதைப்பொருள் பாவனை,சண்டைகள்,சட்ட்டவிரோத செயற்பாடுகள் என்பவன திணிக்கப்பட்டது.

இதனை மாற்றி அமைக்கும் முகமாக சிறுவர் கழகங்களின் தொடர் பயனமாக 2014 ஆகஸ்ட் மாதம் இளைஞர் கழகத்தினுடைய தலைவரும் சிறகுகள் இளைஞர் அமைப்பினுடைய தலைவரும் பணிப்பாளர் நாயகமும் ஆகிய கௌரவ கணேசலிங்கம் சிம்சுபன் அவர்களால் மீள் உருவாக்கப்பட்டதே யுரேனஸ் இளைஞர் கழகம் ஆகும்.

Follow us

samalankulam youth club - t.n0245680456

  • Twitter Metallic
  • Facebook Metallic
  • YouTube Metallic

Twitter

Facebook

Become a Fan

YouTube

Subscribe

bottom of page