வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழா..!
- simsuban
- May 4, 2016
- 1 min read




















வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா சமளங்குளம் பாடசாலை மைதானத்தில் நேற்று (13/04) காலை 10 மணியளவில் கழகத்தின் தலைவர் திரு க.சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மற்றும் சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், கௌரவ உறுப்பினர்கள், கழகத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதுகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு முதன் முறையாக வவுனியா சமளங்குளத்தில் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
Comments