ஆரம்ப பிரிவு மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் சமளங்குளம் பாடசாலை வெற்றி
- simsuban
- Nov 21, 2015
- 1 min read
ஆரம்ப பிரிவு மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் சமளங்குளம் பாடசாலை வெற்றி
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20.11.2015) சமூக வாசிப்பு நிகழ்வு சமளங்குளம் பாடசாலை பிரதான மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வு ஆரம்ப பிரிவு ஆற்றலை வெளிக்கொண்டு வருதற்கு பெரும் உதவியாக இருந்தது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.K.S.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடாத்தப்பட்டது. பிரத விருந்தினரகா வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கொளரவ அல்காஜ் K.K.மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். கொளரவவிருந்தினர்களாக ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.மு.பாலசிங்கம் ஜயா அவர்களும் சமளங்குளம் கிராம சேவையாளர் திரு.N.குபேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மதகுருமார்களும் RDS தலைவர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திசங்க செயாலாளர் தி.தவரூபன் அவர்களும் கலந்துகொண்டனர்.
Kommentarer